பதிவு செய்த நாள்
27
மே
2019
02:05
சூலூர்: பள்ளபாளையம், அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், திருவிழாவில், வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா நடந்தது.சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரத்தில்
அமைந்துள்ள, அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், 12ம் ஆண்டு விழா முன்னிட்டு, மகா சக்தி யாக வேள்வி மற்றும் 108 சங்காபிஷேக பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு,
அம்மனுக்கு அலங்கார பூஜையை தொடர்ந்து,இப்பகுதியில் செயல்படும் முத்துமாரி அம்மன் வள்ளி கும்மியாட்டக்குழுவின் கும்மியாட்ட அரங்கேற்றம் நடந்தது.
கும்மியாட்டக்குழு மற்றும் கோவை தாள சங்கமம் கிராமிய கலைக்குழு இணைந்து நடத்திய இந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை
வகித்தார்.கும்மியாட்ட பயிற்சியாளர்கள் செலக்கரிச்சலை சேர்ந்த வெள்ளிங்கிரி, கோவையை சேர்ந்த தர்மராஜ் மற்றும் நடராஜன் ஆகியோர் முன்னிலையில், கலைக்குழு மற்றும் கும்மியாட்டக்குழுவை சேர்ந்த, சிறுமியர் முதல் வயதான பெண்கள் வரை பங்கேற்ற, வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது.இப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் நமது பாரம்பரிய,
கலாசார கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.