* அன்பும், ஆற்றலும் இணைந்து விட்டால் உலகிலுள்ள அனைவரும் வளமாக வாழலாம். இந்த இரண்டும் தனித்திருக்கும் வரை எந்த செயலும் வெற்றி பெறாது. * நீங்கள் செய்வதை மட்டும் நியாயம் என்று வாதாடாதீர்கள். மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள். * கடவுள் மகத்தானவர் என்பதால் தான், நாம் சொல்லும் புகழ் மொழிகள், ஏளனத்தை பொருட்படுத்தாமல் மவுனமாக இருக்கிறார். *கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. அது போல நம் கண்களுக்கும் அற்பமானது என எதுவும் இருக்கக் கூடாது. * கடவுள் பிரம்மாண்டமானவர். அவரது அருளால் தான் உலகில் எல்லாச் செயல்களும் நடக்கின்றன. * கடவுளின் அன்பை நினைந்து மனம் நெகிழுங்கள். அவரது அருளைப் பெற்று விட்டால் வேறு எதுவும் பெரிதாக தோன்றாது. * கடவுள் மீது மனிதன் கொண்டிருக்கும் மதிப்பீடு அர்த்தமற்றது. அவரது சக்தியைத் தீர்மானிக்கும் சக்தி யாருக்கும் இல்லை. * உங்கள் சிந்தனைகள் இமயமலை சிகரத்தையும் விட, உயர்ந்ததாக அமையட்டும். கடலையும் கூட ஆழ்ந்து பார்க்கும் திறம் பெற்றதாக இருக்கட்டும். * மனித ஆற்றல் மிக அற்பமானது. அதனால் அழகு, அறிவு, பணத்தால் அகந்தை கொள்வது முட்டாள்தனமானது. * தீயவர்களிடமும் நல்ல குணம் இருக்கிறது. ஒழுக்க சீலர்களிடமும் கெட்ட குணம் இருக்கிறது. இதுவே உலக இயல்பு. * அன்புடன் நடந்து கொள்ளுங்கள். உயிர்கள் மீதும் இரக்கப்படுங்கள். நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். ஆனால் யாருக்கும் அடிமையாகி விடாதீர்கள். * அதிகாரத்தில் இருக்கும் திறமையற்ற அரசனை விட, நேர்மை மிக்க தொழிலாளியாக இருப்பது மேலானது. - வாழ்த்துகிறார் அரவிந்தர்