ரமலான் மாதத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். இப்போது நோற்கும் நோன்பின் மகத்துவம் பற்றி அறிவோமா!ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்குஎல்லாம் விலங்கிடப்படுகின்றன.சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள்.
யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும் (நம்பிக்கை), நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் லைலத்துல் கத்ர் இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில், எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ, அவருடைய உள்ளம், கியாம நாளிலே (வாழ்வின் இறுதிக்கட்டம்) விழிப்புடன் இருக்கும்.
* இன்று (மே., 31ல்) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:40 மணி * நாளை (ஜூன் 1ல்) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி