சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ஜூன் 3ல் வைகாசி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2019 02:06
சிவகாசி : சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ திருவிழா ஜூன் 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி வல்வேறு வாகனங்களில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9 ம் நாள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஹரிஹரன், இணை ஆணையர் ஜெகன்னாதன், செயல் அலுவலர் சுமதி செய்து வருகின்றனர்.