நாகர்கோவிலின் ஒரு பகுதியான வடசேரியில், வரலாற்று சிறப்பு மிக்க விநாயகர் திருக்கோயில் ஒன்று உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் விநாயகருக்கு கருத்து விநாயகர் என்று திருப்பெயர்!
இந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள் வீடு கட்டுதல், திருமணம் போன்று எந்த சுப காரியங்களைச் செய்வதாக இருந்தாலும், முன்னதாக இந்த பிள்ளையாரின் சன்னிதிக்கு வந்து பூ, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு வைத்து, விநாயகரின் திருவுள்ளக் கருத்தைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் இந்த விநாயகருக்கு கருத்து விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.