கடலுார் : குமளங்குளம் ஞான முத்தாலம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.கடலுார் அடுத்த குமளங்குளம் கிராமத்தில் உள்ள ஞான முத்தாலம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.அம்மனுக்கு சிறப்பு பூஜையும், சாகை வார்த்தலும் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு விநாயகர், முருகர், அய்யனார், அம்மன் வீதியுலா நடந்தது.