நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு, வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, நிகும்பலாயாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோயிலில், நேற்று (ஜூன்., 4ல்) வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் கோயில் உலாவாக வந்து, பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிஷேகம் நடந்தது.
மதியம் 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி அறிவழகன், குருக்கள் செய்திருந்தனர்.