அருணாசலேஸ்வரர் கோவில் குளம் நுண்ணுயிர் கலவையால் சுத்திகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2019 11:06
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கோவில் குளம் நுண்ணுயிர் கலவையால் சுத்திகரிக்கப்படுகிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளம் சிவகங்கை தீர்த்த குளம் ஆகியவற்றில் கடந்த மாதம் மீன்கள் செத்து மிதந்தன. ஆய்வு செய்தபோது குளத்தில் மீன்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காதது பருவ நிலை மாற்றமே காரணம் என தெரிந்தது.இதையடுத்து குளத்தை துாய்மை படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. இதன்படி நுண்ணுயிர் கலவை மற்றும் தாவரங்களால் சுத்திகரிக்கும் முறை நேற்று துவங்கியது.
திட்டத்தை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.வெட்டிவேர் தாவரத்தை நீரில் மிதக்க விட்டு நுண்ணுயிர் கலவை குளத்தில் தெளிக்கப்பட்டது. இதன்மூலம் வெட்டிவேர் தாவரம் குளத்தில் படர்ந்து ஆக்சிஜன் அதிகமாக கிடைக்க வழி வகை செய்யும். நுண்ணுயிர் கலவையால் குளத்தில் உள்ள பாசிகள் அழிந்து துாய்மை படுத்தப்படும்.இதன்மூலம் குளம் எப்போதும் துாய்மையாக இருக்கும். குளத்தில் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படாது.