திருத்தணி: திருத்தணி, அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பிரம்மோற்சவம், 3ம் தேதி தொடங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில், தினமும், மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்., 3ல்) , பூகரகம் வீதியுலா நடந்தது. நேற்று (ஜூன்., 4ல்), உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.