பதிவு செய்த நாள்
06
ஜூன்
2019
12:06
நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.
முஸ்லிம்கள் கடந்த 30 நாட்களாக ரம்ஜான் நோன்பு இருந்து தினமும் 5 வேலை தொழுகை நடத்தினர்.நேற்று (ஜூன்., 5ல்) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம் பாக்கத்தில் இருந்து நகரின் முக்கிய சாலை வழியே ஊர்வலமாக சென்று ,கொத்வாபள்ளியில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
விருத்தாசலம் ஆலடி ரோடு, நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. அதேபோல், வடக்குப் பெரியார் நகர் பள்ளிவாசல், ஜங்ஷன்ரோடு பள்ளிவாசல்
உள்ளிட்ட இடங்களில் தொழுகையில் ஈடுபட்டனர்.
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி, பரங்கிப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் அலி கவுஸ் மரைக்காயர் திடல், பு.முட்லூர், கிள்ளை உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. ஷாதி மகாலில், நடந்த சிறப்பு தொழுகையில், ஏராளமான முஸ்லிம் பெண்களும் சிறப்பு ஈடுப்பட்டனர்.
சிதம்பரத்தில் ஈத்கா மைதானத்தில் ராம்ஜான் தொழுகை நடந்தது. சி.என்.பாளையம் மஸ்ஜிதே மஹம்மதியா அஹ்லஹதீஸ் பள்ளி வாசல், மஸ்ஜித் அல் முஹமத் அஷ்ரப்
சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் ஆகிய பள்ளி வாசல்களில் நேற்று (ஜூன்., 5ல்) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
கடலூர் டவுன்ஹாலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், கடலூர் மஞ்சகுப்பம் டவுன் ஹாலில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆயங்குடி
ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை மற்றும் பிராத்தனை நடந்தது. லால்பேட்டை ஈத்கா மைதானத்தில் உள்ள குத்துபா பள்ளி வாசலில் தொழுகையில் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.