விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் 30 க்கு மேற்பட்ட இடங்களில் நடந்த ரம்ஜான் தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
விருதுநகரில் ஆறு பள்ளிவாசல், சிவகாசியில் ஏழு, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தலா ஐந்து, சாத்தூர் மூன்று, திருச்சுழி இரண்டு என 30 க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் நேற்று (ஜூன்., 5ல்) ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊர்வலமாக சென்று பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
* ராஜபாளையம்: ராஜபாளையம் சம்மந்தபுரத்தில் இருந்து முஸ்லிம்கள் கொடி ஏந்தி முடங்கியாறு ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.மைதான வாசலில் கொடியேற்றிய பின் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். அரை மணி நேரம் நடந்த தொழுகைக்கு பின் ஒருவொருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.
* ராஜபாளையம் டி.என்.டி.ஜே .கிளை சார்பில் தக்வா பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. 700 க்கு முஸ்லிம்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் :ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியில் ரம்ஜான் விழா தாளாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்தது. முதல்வர் முருகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் திவ்யநாதன் வரவேற்றார். பத்தாம் வகுப்பு மாணவி பாண்டி கனீஸ்வரி ரம்ஜான் குறித்து பேசினார். மாணவி ஜாஸ்மின் திருக்குர்ஆன் வாசித்தார். மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.