பதிவு செய்த நாள்
16
மார்
2012
11:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, கன்றுக்குட்டிகளை தானம் செய்ய வந்த பெண் பக்தரை அலைக்கழிப்பு செய்ததால் வேதனையடைந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வரும் பக்தர்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் காணிக்கையாக தங்கம், வெள்ளி உட்பட பல பொருட்களை செலுத்துவர். இந்நிலையில் மம்சாபுரத்தை சேர்ந்த ராதிகா, தங்களது குழந்தைகள் உடல் நலம் வேண்டி, மாடு கன்றுக்குட்டிகளை தானம் செய்ய ஆண்டாள் கோயில் வந்தார். கோயில் ஊழியர்கள்," இங்கு தானம் செய்ய முடியாது. திருவண்ணாமலை சீனிவாசபெருமாள் கோயில் சென்று தானம் செய்யுங்கள், என ,கூறினர். அதன்படி திருவண்ணாமலை கோயிலுக்கு கொண்டு சென்றனர். ராதிகா,"" ஆண்டாள் கோயிலுக்கு தான் கன்றுக்குட்டிகளை தானம் செய்ய வந்தோம். திருவண்ணாமலை கோயிலுக்கு கொண்டு செல்ல கூறுகின்றனர், என்றார்.கோயில் செயல் அலுவலர் குருநாதன் ,""ஆண்டாள் கோயிலுக்கு யாரும் மாடுகளை தானமாக தருவதில்லை. திருவண்ணாமலை கோயிலில் தான் தானம் செய்வர். இதனால் அங்கு கொண்டு செல்ல கூறினோம், இந்த கன்றுக்குட்டிகள் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு வந்தவை. அங்கு பராமரிக்க முடியாததால் இங்கு கொண்டு வரப்பட்டது, என்றார். வைத்திய நாத சுவாமி கோயில் செயல் அலுவலர் சரவணன்,"" நான் வெளியூரில் உள்ளேன். வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு யாரும் கன்றுகுட்டிகளை நேர்ச்சைக்காக கொண்டு வந்ததாக தகவல் இல்லை, என்றார்.இது போன்று பக்தர்களை அலைக்கழிக்காமல் , கோயிலிலே நேர்த்திக்கடன் செலுத்த ஆண்டாள் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.