தீர்த்த நீரில் மிதப்பது போன்ற காட்சியளித்த சுவாமி சிலைகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2012 11:03
பழநி : நெய்காரபட்டியில் தீர்த்த நீரில் சுவாமி சிலைகள் மிதப்பது போன்ற காட்சியை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். பழநியை அடுத்துள்ள நெய்க்காரபட்டியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் 20 லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூன் 29 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. கோயிலில் பிரதிஷ்டை செய்ய ராமலிங்க சவுடேஸ்வரி, சந்தான விநாயகர், தேவல மகரிஷி, ஐந்து தலை நாகம், புனையல் நாகம், சிம்ம வாகனம், பலிபீடம் உள்ளிட்ட சிலைகள், சாஸ்திர முறைப்படி தீர்த்தம் நிரம்பிய தொட்டியில் வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த மோகனா என்ற பெண் சிலைகளை பார்த்த போது, தீர்த்தத்தின் மேல், சிலைகள் மிதப்பது போன்ற காட்சி தெரிந்துள்ளது. இந்த செய்தி பரவவே, தண்ணீரில் சுவாமி சிலைகள் மிதப்பது போல் உள்ள காட்சியை காண பொதுமக்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.