பதிவு செய்த நாள்
08
ஜூன்
2019
12:06
அனுப்பர்பாளையம்:திருப்பூர், காலேஜ் ரோட்டில் பிரசித்தி பெற்ற கொங்கணகிரி ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்தபெருமான் கோவிலில் ஏப்., மாதம் நடந்தது. இதையொட்டி, தினமும் மண்டலாபிஷேக பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.தொடர்ந்து, 48 நாட்கள் நடந்த இதன் நிறைவு விழா மற்றும், 108 சங்காபிஷேகம், நாளை (ஜூன்., 9ல்) நடக்கிறது.
விழாவையொட்டி, இன்று (ஜூன்., 8ல்), மாலை 5:00 மணி முதல், 108 சங்கு பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் இரவு 7:00 மணிக்கு கோவை பேரூராதீனம் சாந்தலிங்க
மருதாசல அடிகளாரின் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. நாளை (ஜூன்., 9ல்), காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
காலை, 11:30 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, துணை தலைவர் ராஜாமணி, செயலாளர் கணேஷ், பொருளாளர் துரைசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.