விக்கிரவாண்டி அருகே வி.நல்லாளம் 3 கோவில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2019 01:06
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே வி.நல்லாளம் கிராமத்தில் 3 கோவில்களில் நாளை (ஜூன்., 9ல்) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி அடுத்த நல்லாளம் கிராமத்தில் உள்ள விநாயகர், முத்துமாரியம்மன், பிடாரியம்மன் ஆகிய 3 கோவில்கள் கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு குடும்பத்தினரால் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நாளை 9ம் தேதி நடக்கிறது.
அதனையொட்டி, நேற்று மாலை 6:00 மணியளவில் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது.இன்று (ஜூலை 8ல்) மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை முடிந்து, நாளை 9ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும்; 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:00 மணிக்குள் விநாயகர், முத்து மாரியம்மன், பிடாரியம்மன் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து 11:00 மணியளவில் மகா தீபாராதனை முடிந்து அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.