பெங்களூரு – மைசூரு சாலையில் 120 கி.மீ., தூரத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் கோயில் உள்ளது. இங்குள்ள இரண்டு தூண்களில் பெருமாளின் 24 விதமான வடிவங்களைக் காணலாம். ஓர் ஆண்டில் இடம் பெறும் 24 ஏகாதசிக்கு ஒன்று வீதம் இந்த வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. கருவறையில் சுவாமிக்கு அருகில் கவுதம முனிவரும், காவிரித்தாயும் உள்ளனர். கங்க மன்னர்களால் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள பெருமாளை ஆதிரங்கன் என்றும், சிவசமுத்திரத்தில் இருப்பவரை மத்தியரங்கன் என்றும், ஸ்ரீரங்கத்தில் இருப்பவரை அந்தியரங்கன் என்றும் சொல்வர்.