என்ன....சென்ற வாரம் கொடுத்த ஹோம் ஒர்க்கை முடித்தீர்களா? வாழ்வில் முன்னேற நம்மைப் பற்றியும், சமுதாயம் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மற்றவர் நம்மைத் தூற்றினாலும், புகழ்ந்தாலும் அதை ஒரு பொருட்டாக கொள்ள மாட்டோம். ஒருவேளை அவர்கள் சொல்வது சரி தான் என்றாலும் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என சிந்திப்போம். சரி... நீங்கள் எழுதிய காகிதத்தில் என்ன இருக்கிறது? உதாரணமாக ஒரு ஆண்டுக்கு முன் நண்பரை ஒருவரைச் சந்தித்தேன். சோர்வாக இருந்தார். ஏன் எனக் கேட்ட போது, தனது நிறுவனத்தில் யாரும் தன்னை பொருட்படுத்துவதில்லை என்றும், இந்நிலை நீடித்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும் வருந்தினார். அவருக்கு நான்கு வார்த்தைகளைச் சொன்னேன். அவை: பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் என்பன. இதை ஆங்கிலத்தில் ’ கு.ஙி.O.கூ’ என்பார்கள். அதாவது குtணூஞுணஞ்tட, ஙிஞுச்டுணஞுண்ண், Oணீணீணிணூtதணடிtதூ ச்ணஞீ கூடணூஞுச்t..
இந்த நான்கு பரிமாணங்களில் பலமும், பலவீனமும் நமக்குள் இருக்கின்றன. வாய்ப்பு, அச்சுறுத்தல்கள் நமக்கு வெளியே சமுதாயத்தில் இருக்கின்றன. நமக்கு வெளியே என்ன தான் வாய்ப்பும், அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அவற்றை எதிர்கொள்ள நம்முடைய பலத்தைப் பெருக்கி, பலவீனத்தை குறைக்க வேண்டும். இதற்கு மனம் விழித்தெழ வேண்டும். அனைவருக்கும் மனம் இருக்கிறது. ஆனால் அது விழித்திருக்கிறதா என்பது தான் பிரச்னை. அப்படியே இருந்தாலும் அது சொல்வதை கேட்கிறோமா என்பது முக்கியம். ஒரு வங்கியின் வாசலில் காவலாளி இருந்தால் போதாது, அவர் விழித்திருக்க வேண்டும். விழித்திருக்கும் மனமே வாழ்வின் காவலாளி. இலங்கை வேந்தன் ராவணன் வீரன் தான். ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்கவில்லை. ’பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்பது ராவணனுக்கு பொருந்தும். இந்த பலவீனம் தானே அவனை வீழ்த்தியது? செய்வது தவறு என சுட்டிக் காட்டினாள் மனைவி மண்டோதரி. அதோடு சீதை, அனுமன், விபீஷணன் என பலர் சொல்லியும் பொருட்படுத்தவில்லை. இன்றைக்கு பல நிறுவனங்களில் மற்றவர் சொல்லும் கருத்துக்களை எப்படி அக்கறையோடு கேட்க வேண்டும் என்பது பற்றி பயிற்சி தருகின்றனர். ஆங்கிலத்தில் ’லிசனிங் ஸ்கில்’ (ஃடிண்tஞுணடிணஞ் ண்டுடிடூடூ) என்பார்கள். நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருப்போருக்கு தேவையானது இது. ராவணனுக்கு திறமை இருந்திருந்தால் மற்றவர் அளித்த அறிவுரையை கேட்டிருப்பான். ’இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்ற குறளுக்கு ராவணனே எடுத்துக்காட்டு.
ராமாயணம் சொல்லிக் கொடுக்கும் மேலாண்மைத் தத்துவம் இது.
சரி....முதலில் நான் சொன்ன நண்பரின் பிரச்னைக்கு வருவோம். அவரது பிரச்னையைத் தீர்க்க ஒரு எளிதான பயிற்சியைச் செய்ய வைத்தேன். அவருடைய பலம் தொழில்நுட்பப் படிப்பும், பத்தாண்டு பணி அனுபவமும். ஆனால் அவரது பலவீனம் என்பது எதையும் சாதிக்க முடியாது என்னும் தாழ்வு மனப்பான்மை. அதன் காரணமாக தனது கருத்துக்கள் சரியாக இருந்தாலும் சொல்லமுடியாத நிலை. இதன் காரணமாகவே யாரும் அவரை பொருட்படுத்தவில்லை. இதுவரை அவர் சாதித்த சாதனைகளை பட்டியலிடச் சொன்னேன். பள்ளி, கல்லூரி நாட்களில் மேடைப் பேச்சாளர் அவர். படித்தது தாய்மொழியில். ஆனால் வேலையோ ஆங்கிலம் பேச வேண்டிய சூழலில்! இதுவே அவரது தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம். இதிலிருந்து வெளியே வர அவர் தான் முயற்சிக்க வேண்டும், மற்றவர்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள் என்பதையும் உணர வைத்தேன்.
விளைவு? குழப்பத்திலிருந்த விடுபட்டு மனம் விழித்துக் கொண்டது. அடுத்த ஆறு மாதத்தில் ஆங்கிலத்தில் பேச பயிற்சி பெற்றார். தன்னுடைய பலம் பற்றி மட்டுமே எப்போதும் நினைத்தார். எட்டு மாதங்களில் தாழ்வு மனப்பான்மையும், பயமும் அவரை விட்டு விலகியது. அதே நேரம் தொழில்நுட்பக் கல்விக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்து சான்றிதழ் படிப்பையும் முடித்தார். இதுவரை இல்லாத தைரியம் வெளிப்பட ஆரம்பித்தது. பிறகு என்ன...இன்று அவர் உயர்பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்!
சரி...அவர் ஆரோக்கியத்துடன் இருந்ததால் வாழ்வில் சாதித்தார். உடல் குறைபாடு உள்ளவர் என்ன செய்வது என நீங்கள் கேட்கலாம்.
நம் வாழும் இந்த உலகத்தின் மறுமூலையில் ஒரு மனிதர் வாழ்கிறார். அவர் பெயர் எரிக் வேஹன்மேயர் (உணூடிடு ஙிஞுடிடஞுணட்ச்தூஞுணூ). அவருக்கு என்ன இப்போது என்று கேட்பீர்கள். அவரது 20ம் வயதில் கல்லூரியில் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பெற்றார். 1991ல் ஆப்கானிஸ் தானுக்கு அருகிலுள்ள ’டெஜகிஸ்தான்’ நாட்டின் உயரமான சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டினார். 1993ல் பாகிஸ்தான் காரகோரம் மலைச்சிகரத்தில் ஏறினார். 1995ல் வட அமெரிக்காவின் மிக உயரமான 21,200 அடி உயரமான ’மெகன்லி’ என்ற மலையுச்சியை அடைந்தார். 2001ல் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தார். 2002 ஆம் ஆண்டு உலகில் இருக்கும் ஏழு உயரமான சிகரங்கள் மீது ஏறினார். இதுவரை நூறு பேர் மட்டுமே இந்த சிகரங்களில் ஏறியுள்ளனர். இதில் என்ன ஆச்சரியம்... இப்படி பலரும் சாதித்திருக்கிறார்கள். இவரைப் பற்றி மட்டும் ஏன் சொல்கிறீர்கள் எனக் கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது. சொன்னால் நம்புவீர்களா? எரிக் பிறவியிலேயே பார்வையற்றவர். கண்பார்வை இல்லாத எரிக்கால் மட்டும் சாதிக்க முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது? நாம் விரும்பும் நிலையை அடைய விடாமல் தடுப்பது நம் சுபாவம் தான். ஆங்கிலத்தில் ’ஆட்டிட்யூட்’ (அttடிtதஞீஞு) என்பார்கள்.
வாழ்வில் முன்னேறச் செய்வதும், பின்னுக்குத் தள்ளுவதும் நம் மனம் தான். கேரளாவில் ஒரு ரயில் நிலையத்தில் சுமைத் தூக்கும் போர்டர் ஒருவர் இருந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவரது மனம் விழித்தெழுந்தது; அவரை என்னவாக மாற்றியது என்பதை அறிய ஒரு வாரம் காத்திருங்களேன்!