பதிவு செய்த நாள்
19
மார்
2012
11:03
தேனி: ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக, ஏழு கிராம மக்கள் ஒன்று கூடி நடத்தும் மீன் பிடி திருவிழா, தேனி மாவட்டத்தில் நடந்தது.தேனி அருகே உள்ள அமச்சியாபுரம், குன்னூர், வாய்க்கால்பட்டி, கறிவேல்நாயக்கன்பட்டி, திருமலாபுரம், அரப்படித்தேவன்பட்டி, கோவில்பட்டி ஆகிய ஏழு கிராம மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, இங்குள்ள செங்குளம், கருங்குளம் கண்மாய்களில் நேற்று மீன் பிடி திருவிழா நடந்தது. ஏழு கிராம பெரியோர்கள் சாமி கும்பிட்டு, மீன் பிடியை துவக்கி வைத்தனர். வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை, கண்மாயில் இறங்கி, இஷ்டம் போல் மீன்களை பிடித்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடும்பத்தினருடன் வலை, கூடைகளை போட்டு மீன்களை பிடித்தனர்.ஒரே நாள் நடத்தப்படும் இத்திருவிழா மூலம் கிராம மக்கள் தங்களின் ஒற்றுமை வளர்வதாகத் தெரிவித்தனர்.