பதிவு செய்த நாள்
19
மார்
2012
10:03
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது அம்மனுக்கு அணிவிக்கப்படும், ஆறு வளையங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த, வில்லியநல்லூர் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 48. இவரது இடத்தில் வீடு கட்ட, அஸ்திவாரம் தோண்டிய போது, மூன்றடி ஆழத்தில், ஒரு மண் கலயத்தில், ஆறு வளையங்கள் இருந்தன. மயிலாடுதுறை தாசில்தார் பிச்சைராமன், தரங்கம்பாடி தொல்லியல் துறை காப்பாட்சியர் முத்துசாமி ஆகியோரிடம், வளையங்கள் மற்றும் கலையத்தை ஒப்படைத்தார். முத்துசாமி கூறியதாவது:இந்த நகைகள் நாயக்கர் காலத்தில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட, கால் தண்டை மற்றும் வளையல்களாக இருக்கலாம். இவை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பழங்கால அம்மன் கோவில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.இளவரசிகள் அம்மனுக்கு ஆபரணங்களை அணிவித்து, ஆராதனை செய்வது நாயக்கர் காலத்து மரபாக இருந்துள்ளது. இரண்டு தண்டைகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 250 கிராம் எடையுள்ள, ஆறு வளையங்களும் ஐம்பொன்னாக இருக்கலாம். இவ்வாறு முத்துசாமி கூறினார்.