சபரிமலை: பங்குனி மாத பூஜைகள் முடிந்து, சபரிமலை நடை நேற்றிரவு அடைக்கப்பட்டது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைகளுக்காக நடை 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் காலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகளுடன், சகஸ்ர கலசாபிஷேகம், சந்தன அபிஷேகம், அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் போன்ற சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்து வந்தன. மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, நேற்றிரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.