ஒருவன் தன் நண்பனுடன் பயணம் புறப்பட்டான். வழியில் நண்பனுக்கு பசியெடுத்தது. அங்கு இருந்த ஒரு வீட்டிற்கு சென்று, மூன்று அப்பங்களைக் கடனாகக் கேட்டான். அதை திரும்பத் தருவதாகவும் தெரிவித்தான். களைப்புடன் படுத்திருந்த வீட்டுக்காரனோ, ’என்னால் எழுந்து அப்பத்தை தர முடியாது’ என மறுத்தான். உதவி கேட்டவனும் விடுவதாக இல்லை. “நான் எனக்காக கேட்கவில்லை. பசியோடு இருக்கும் நண்பனுக்காக கேட்கிறேன். தயவுசெய்து கொடுங்கள்” என்றான். மீண்டும் முயற்சி செய்யவே கேட்டது கிடைத்தது. முயற்சி உடையவர்களால் எதையும் பெற முடியும். “கேளுங்கள்! அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். ஏனென்றால் கேட்கின்ற எவனும் பெற்றுக் கொள்கிறான். தேடுகிறவன் கண்டடைகிறான்” என்கிறது பைபிள்.