பதிவு செய்த நாள்
20
ஜூன்
2019
01:06
பழநி, : உலகநலன் வேண்டி, பழநி பெரியாவுடையார் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. ஆண்டுதோறும் ஆனிமாதம் பவுர்ணமியை முன்னிட்டு, 4 நாட்கள் உலக நலன் வேண்டி, பழநி முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு பழநி மலைக்கோயிலில் ஜூன் 16ல் , மூலவருக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தில் கீரிடம் சூட்டி பூஜைகள் நடந்தது. ஜூன் 17 ல் திருஆவினன் குடிகோயில், ஜூன் 18ல் பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
நிறைவு நாளான நேற்று கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. லிங்கத்திற்கு அன்னத்தால் அலங்காரம் செய்தும், நடராஜர், உத்திரர் உள்ளிட்ட பரிவாரதெய்வங்களுக்கும் அன்னம் படைத்து பூஜைகள் நடந்தது. இதில் கந்தவிலாஸ் விபூதி ஸ்டோர் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரஷே்குமரன், டி.எஸ்.பி., விவேகானந்தன், கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.