பதிவு செய்த நாள்
20
ஜூன்
2019
01:06
காஞ்சிபுரம் : சர்வதீர்த்த குளத்தில், சிறுவர்கள் விளையாடும் போது பழமையான சிலை கண்டெடுக்கப்பட்டு, போலீசில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம், சர்வதீர்த்த குளத்தில், தண்ணீர் வற்றி விட்டதால், நேற்று மாலை, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.அப்போது, ஒரு சிலை கிடப்பதை பார்த்து, அருகில் உள்ள கடைக்காரர் சந்தியப்பனிடம் தெரிவித்துள்ளனர். அவர், சிவ காஞ்சி போலீசிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். பின், போலீசார் அங்கு சென்று சிலையை வாங்கி சென்றனர்.இந்த சிலை, ஒரு அடி உயரம், நான்கு கிலோ எடை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஐம்பொன் சிலையா அல்லது வெளியில் விற்கப்பட்ட சிலையா என, போலீசார் விசாரிக்கின்றனர். அறநிலையத் துறை ஸ்தபதி ஒருவர் கூறுகையில், 14ம் நுாற்றாண்டு சிலை என்றும், சத்திய நாராயணப் பெருமாள் என்றும் கூறப்படுகிறது. பழமையான சிலை என்பதால், அதற்கு மதிப்புள்ளதாக ஸ்தபதி ஒருவர் கூறியுள்ளார். இந்த சிலையை கோட்டாச்சாரியரிடம் ஒப்படைக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.