புதுச்சேரி: பிள்ளைச்சாவடி கமல சாயிபாபா கோவிலில், சீரடி சாய்பாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 17 ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா மற்றும் 108 கலச அபிஷேக விழா நாளை 21ம் தேதி நடக்கிறது.இதையொட்டி நேற்று மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 4:00 மணிக்கு வடுக பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, குருபூஜை, மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.நாளை 21ம் தேதி காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.