பதிவு செய்த நாள்
20
ஜூன்
2019
01:06
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில், 23ம் தேதி பள்ளி அறை உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை நடக்கிறது. புதுச்சேரி- திண்டிவனம் சாலை, மொரட்டாண்டி டோல்கேட் அருகில், இரும்பை குபேரன் நகரில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலா திரிபுரசுந்தரி பள்ளி அறை உற்சவ மூர்த்தி, பிரதிஷ்டை விழா வரும் 23ம் தேதி காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை நடக்கிறது.வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்கு விக்னஷே்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், முதல் கால யாக பூஜைகளும், பள்ளி அறை அம்பாளுக்கு அஷ்டாதசகிரியை பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. 23ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்பாட்டை தொடர்ந்து காலை 9:30 மணி முதல் 11:00 மணிக்குள் பள்ளி அறை அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.மதியம் அன்னதானமும், இரவு 7:00 மணிக்கு அம்பாளுக்கு விஷேச பூஜை, மகா தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை, கண்ணாடி பல்லக்கில் அம்பாள் புறப்பாடாகி பள்ளி அறை எழுந்தருள், கண்ணாடி தொட்டில் சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.