அச்சிறுப்பாக்கம்: பெரும்பேர்கண்டிகை கிராமத்தில், பொங்கு நாச்சீஸ்வரர், கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, இன்று, நடைபெறுகிறது.
மதுராந்தகம் தாலுகா, அச்சிறுப்பாக்கம் அடுத்த, பெரும் பேர்கண்டிகை கிராமத்தில், பொங்குநாச்சீஸ்வரர், கன்னியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில் திருப்பணிகள், ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன.சில நாட்களுக்கு முன், திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. 18ம் தேதி, விக்னேஸ்வர பூஜை மற்றும் கோ பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.இன்று, காலை, 7:30 மணியிலிருந்து, 9:00 மணிக்குள், பால விநாயகர், பொங்கு நாச்சீஸ்வரர், சப்த கன்னியம்மன், பெரியாண்டவர் ஆகிய கோவில்களில், மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.காலை, 9:30 மணிக்கு, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. வரும், 21ம் தேதி, த்ரிபசஷ பூஜா, 45 தினங்கள் மண்டல அபிஷேகம் நடைபெறுகிறது.இவ்விழா ஏற்பாடுகளை, உபயதாரர், எஸ்.எம்.சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.