மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகேவுள்ள பள்ளேபாளையம் ஊராட்சி, வெள்ளிக்குப்பம்பாளையத்தில் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பவானி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து கோவிலை சுத்தம் செய்தனர். சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக வேள்விகளை நடத்தினர். நேற்று காலை, 9:00 மணிக்கு தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி எடுத்து வந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன், பண்ணாரியம்மன், பத்ரகாளியம்னுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பெரியநாயக்கன்பாளையம் வாராஹி அம்மன் கோவில் சாக்த வாராஹி மணிகண்ட சுவாமி பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.