Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ... திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதரை உள்ளூர் பக்தர்கள் இரவு, 8:00 மணி வரை தரிசிக்கலாம்
எழுத்தின் அளவு:
அத்தி வரதரை உள்ளூர் பக்தர்கள் இரவு, 8:00 மணி வரை தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
12:06

காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதரை தரிசிக்கும் உள்ளூர் பக்தர்கள், மாலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை, எப்போது வேண்டுமானாலும் கோவிலுக்கு வரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெளியூர் பக்தர்களுக்கு, மாலை, 5:00 மணிக்கு மேல் தரிசனம் கிடையாது என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு, ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.உள்ளூர் பக்தர்கள், மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, அத்தி வரதரை தரிசிக்க கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆதார் அட்டையை காண்பித்து, 48 நாள்களில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி, பொது வழியில், காலை, 6:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணிக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.அனுமதி உதாரணமாக, இரவு 8:00 மணிக்கு எவ்வளது பக்தர்கள் கூட்டம் வந்தாலும், அவர்கள் தரிசனம் முடித்த பின், வெளியே அனுப்புவார்கள் என, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

ஜூலை, 4 முதல், 10 வரை கோடை உற்சவமும், 11ல் ஆனி கருடசேவையும், 25 முதல், ஆக.,4 வரை ஆடி பூரம் விழாவும், ஆக., 13, 14 ஆளவந்தார் சாற்றுமுறை உற்சவமும், 15ல் ஆடி கருடசேவை உற்சவமும் நடைபெற உள்ளதால், அன்றைய தினங்களில், உள்ளூர் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.வெளியூர் பக்தர்களுக்கு, மாலை, 5:00 மணிக்கு மேல், அத்தி வரதர் தரிசனம் கிடையாது என்ற தகவல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட பக்தர்களுக்கு முழுமையாக தெரியாது என்பதால், மாலையில் தரிசனம் செய்ய நுாற்றுக்கணக்கானோர் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கோரிக்கை: அவ்வாறு வெளியூர் பக்தர்கள் மாலையில் வந்தால், அவர்களுக்கு போதிய இட வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. வசதி உள்ளவர்கள், விடுதியில் தங்குவர். ஆனால், வசதியில்லாத குடும்பத்தினர் தங்குவதற்கு, அன்னை அஞ்சுகம், திருமண மண்டபங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையும், தற்போது பக்தர்களிடையே எழுந்துள்ளது. அத்தி வரதரை தரிசிக்க, சிறப்பு பேக்கேஜ் என்ற பெயரில், தனியார் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், ஆறு பேருக்கு, 9 ஆயிரத்து, 999 ரூபாய் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில், தனி விடுதி, ஆறு பேருக்கும், உணவு, கோவிலுக்கு சென்று வர வாகன வசதி, தரிசன டிக்கெட் ஆகியவை அடங்கும் என, தெரிவித்துள்ளது. கோவிலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.இதுபோன்று, தனியார் நிறுவனங்கள் பக்தர்களை அழைத்து வரலாமா அல்லது வியாபாரம் செய்யலாமா என, கேள்வி எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar