பச்சரிசி – 2 கப் கறுப்பு உளுத்தம்பருப்பு – ஒரு கப் சுக்குப் பொடி – அரை டீஸ்பூன் பொடித்த மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு நெய் – தேவையான அளவு
செய்முறை: அரிசியைத் தனியாகவும், கறுப்பு உளுந்தைத் தனியாகவும் 20 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய உளுந்தைக் கழுவி பாதியளவு தோலை நீக்கி விட்டு, மீதி தோலுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரிசியைக் களைந்து வடிகட்டி சொரசொரப்பாக அரைத்து, உளுந்து மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து 2 மணி நேரம் புளிக்க விடவும். பின் சுக்குப்பொடி, மிளகுப்பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் நெய்யை விட்டு மாவை கனமாக தோசையாக ஊற்றி வேக விடவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு வேக விடவும். சூடான தோசை ரெடியாகி விடும்.