எந்த செயலில் ஈடுபட்டாலும் சிலருக்கு தடை குறுக்கிடும். இவர்கள் விநாயகரை வழிபடுவது நல்லது. எழுத தொடங்கும் போது பிள்ளையார்சுழி இடுவதே பரிகாரம் தான். சிறுபிள்ளையாக மகிழ்ந்து வரம் தருபவர் என்பதால் ’பிள்ளையார்’ என்றும், இவரை விட மேலானவர்யாருமில்லை என்பதால் ’விநாயகர்’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
தடை அகல அவ்வையார் பாடிய ’விநாயகர் அகவல்’ என்னும் பாடலை 48 நாட்கள் மாலை 6:00 மணிக்கு விளக்கேற்றி தொடர்ந்து படியுங்கள். ’ஓம் கணேசாய நம’ அல்லது ’ஓம் சக்திவிநாயக நம’ என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து விட்டு அன்றாடப் பணியில் ஈடுபடுங்கள். சங்கடஹர சதுர்த்தியன்று (தேய்பிறை சதுர்த்தி) விரதமிருந்து அருகம்புல் மாலை சாத்துங்கள்.