பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
02:06
வாழப்பாடி: வாழப்பாடி, அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகத்திலுள்ள, காலபைரவரு க்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலபைரவர் சன்னதியில், மூலவருக்கு நேற்று முன்தினம் (ஜூன்., 25ல்) இரவு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், தேன், பழவகைகளால் அபிஷேகம் நடந்தது. பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கால பைரவர் வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.