காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 27ல்) நடந்தது. விழாவை முன்னிட்டு, 26 ம் தேதி காலை யாகசாலை பூஜை துவங்கியது.
காலை 11 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், யாகசாலை தானியம் வைத்தல், அங்குரார்ப்பணம் முடிந்து பூர்ணாஹூதி நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தியும், தொடர்ந்து விக்ரகங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது. நேற்று (ஜூன்., 27ல்) அதிகாலை 4 மணிக்கு கோபூஜை, கன்னியாபூஜைகள் முடிந்து காலை 8.30 மணிக்கு கடம் புறப்பட்டது. தொடர்ந்து மந்திரங்கள் கூறி 9 மணிக்கு விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை ஹரிகரன் சுகுமார்தாஸ் குடும்பத் தினர் செய்திருந்தனர். காலை மற்றும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.