பதிவு செய்த நாள்
28
ஜூன்
2019
01:06
வடமதுரை : காணப்பாடி கிராமம் கே.புதுப்பட்டி பட்டாளஈஸ்வரி, பேச்சம்மாள், ஆவிளியம்மாள், ஆரத்திவெள்ளையம்மாள், நாகம்மாள், லாட சன்னாசி, கரவண்டராயர், கருப்பணசாமி, பைரவர் கோயிலில் உற்ஸவ திருவிழா 3 நாட்கள் நடந்தது. சுவாமிகளுக்கு கண்திறப்பு, சக்தி கிடா வெட்டுதல்,பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடந்தன. கே.புதுப்பட்டி, மாலப்பட்டி, கரிவாடன்செட்டிபட்டி, எட்டிகுளத்துபட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் மற்றும் தேனி, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் வசிக்கும் புக்கனபள்ளிவார் சமுதாயத்தினர் திரளாக பங்கேற்றனர்.