புதுச்சேரி:முதலியார்பேட்டைசக்திவேல் பரமானந்தர் சுவாமிகள் சித்தர் பீடம், திருக்குட நன்னீராட்டு விழா வரும் 4ம் தேதி நடக்கிறது.இதனையொட்டி, வரும் 3ம் தேதி காலை 9.00 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் விழா துவங்குகிறது. 4ம் தேதி காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, நாடிசந்தனம், மலர் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.45 மணிக்கு சித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ராஜ கணபதி, பாலமுருகன், காலபைரவர், கையிலாசநாதர், ஐய்யப்பன் மற்றும் 39 சித்தர்களுக்கு, திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.