பழநி முருகன் கோயிலில் ‛ரோப்கார் சேவை பாதிப்பு 3 மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2019 03:07
பழநி:பழநி முருகன் கோயிலில் ரோப்கார் பலத்த காற்று வீசியபோது நிறுத்தப்பட்டது. விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழநி முருகன்கோயிலுக்கு ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் குவிந்தனர்.
மலைஅடிவாரப் பகுதியில் 40 கி.மீ., வேகத்திற்கு அதிகமாக காற்று வீசியபோது ரோப்கார் நிறுத்தப்பட்டு காற்றுகுறைந்த நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் வின்ச் ஸ்டேசனில் குவிந்த பக்தர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். முதலாம் வின்ச் பராமரிப்புபணி காரணமாக, இரு வின்ச்கள் மட்டும் இயக்கப்படுவதால் பக்தர்கள் சிரமப்பட்டனர். மலைக் கோயில் பொது தரிசனம் வழியில் 3 மணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர்