ஏழை என்று வருந்த வேண்டாம்; பணம் சக்தியல்ல; நன்மையும், தெய்வ பக்தியுமே சக்தி. வாழ்வில் சாதிக்கவே பிறந்திருக்கிறீர்கள். இல்லாவிட்டால் மரத்திற்கும், உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். நியாயத்தை எடுத்துச் சொல்வதில், கோழையாக இருக்காதீர்கள். முதலில் கீழ்படியக் கற்றுக் கொள்ளுங்கள். கட்டளையிடும் பதவி உங்களைத் தேடி வரும். அன்பு ஒருபோதும் நிந்திப்பதில்லை. அன்பு அனைவரையும் அரவணைக்கும். தன்னம்பிக்கை கொண்டவர்களின் வாழ்க்கையே உலக வரலாறாக இருக்கிறது. வீரனைப் போல சவால்களை சந்தித்தால் வெற்றி உங்களுக்கே. எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேளுங்கள்; சரி என்று தோன்றுவதில் உறுதியாக நில்லுங்கள். ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது. தோல்வி இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாத வாழ்வில் சுவை இருப்பதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகில் எங்கும் இல்லை. தவறுகளைப் பெரும் பேறாக கருதுங்கள். அவை வழிகாட்டும் தெய்வங்கள். - தைரியமூட்டுகிறார் வீரத்துறவி