தன்வந்திரி அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2019 01:07
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையொட்டி, பலவகை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட லேகியம் மகா பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவையொட்டி, காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு உள் புறப்பாடாகி உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகாலம். மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.