பதிவு செய்த நாள்
04
ஜூலை
2019
02:07
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கான முன்னேற் பாடுகள் குறித்து, கலெக்டர் தலைமையில், வரும், 6ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
திருத்தணி முருகன் கோவிலின் இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகர் விடுத்துள்ள அறிக்கை:திருத்தணி முருகன் கோவிலில், இம்மாதம், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, நடைபெற உள்ளது.
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்தான முன்னேற்பாடுகள் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, திருவள்ளூர் கலெக்டர் தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், 6ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, மலைக்கோவிலில், தேவர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு, அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் கருத்து சொல்ல விரும்பும் பக்தர்களும் கூட்டத்தில் பங்கேற்று, விழா குறித்தான ஆலோசனைகள் மற்றும்
குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.