பதிவு செய்த நாள்
04
ஜூலை
2019
02:07
திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை கிராமத்தில், சிவசக்தி சித்தேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள காசி அன்னபூர்ண விஸ்வநாத சமேத அன்னதான மண்டபத்தில், வரசித்தி விநாயகர், பக்த ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் ஆகிய புதிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகளுக்கு மஹா கும்பாபிஷேம், வரும், 7ம் தேதி நடைபெறுகிறது. 6ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, 7ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, நவகிரக ஹோமம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் மூலமந்திர ஹோமம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, விநாயகர், கருடர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு கலசநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.இரவு, 7:00 மணிக்கு, கணபதி, கருடர் மற்றும் ஆஞ்சநேயருக்கு அஷ்ட பந்தன சாத்துகுடி அபிஷேகம் நடைபெறுகிறது.