பதிவு செய்த நாள்
04
ஜூலை
2019
03:07
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே விஸ்வநாயகி அம்பிகை உடனமர் விருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகின்றன.
துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இம் மாதம், 11ம் தேதி நடக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் மிகுந்த பசியுடன் இக்கோயிலை அடைந் தபோது, சிவபெருமான் அன்னத்தையும், முருங்கை பயிரையும் சேர்த்து சமைத்து பசியாற்றி, அருட்காட்சி தந்ததாக வரலாறு கூறுகிறது.
சிதிலமடைந்திருந்த இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டு, கன்னிமூல கணபதி, விருந்
தீஸ்வரர், விஸ்வநாயகி அம்பாள், சுப்ரமணியர், லட்சுமி நாராயண பெருமாள் ஆகிய
தெய்வங்களுக்கு கோபுரங்களும், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், நவநா
யகர்கள், சனீஸ்வரன், ஆஞ்சநேயர், அதிகார நந்தி, உற்சவ மூர்த்திகள், கால பைரவர்
ஆகியவற்றுக்கு பரிவார சன்னதிகளும், கோபுரங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
ஜூலை 7ம் தேதி காலை 9.00 மணிக்கு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன்
துவங்குகிறது.
தொடர்ந்து, 8ம் தேதி முதல் கால யாக பூஜையும், 9ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால
பூஜையும், 10ம் தேதி நான்காம், ஐந்தாம் கால பூஜையும், 11ம் தேதி அதிகாலை, ஆறாம் கால யாக பூஜையும் தொடர்ந்து, காலை, 9.00 மணிக்கு கும்பாபிஷேகம், மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் ஆகியன நடக்கிறது.
மாலை திருக்கல்யாண உற்சவம், திருவீதியுலா ஆகியன நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருச்செந்தூர் திருமுருகன் இறைவழிபாட்டு மன்ற தலைவர் மணி தலைமையில் நடந்து வருகிறது.
கும்பாபிஷேகவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. இதனால் வட மதுரை கிராமமமே விழாக் கோலம் பூண்டுள்ளது.