பதிவு செய்த நாள்
06
ஜூலை
2019
01:07
பேரீஞ்சம்பாக்கம்:சிதிலமடைந்திருந்த பேரீஞ்சம்பாக்கம் சிவன் கோவில் புதுப்பிக்க பட்டதை யடுத்து, கோவிலின் கும்பாபிஷேக விழா, 8ம் தேதி நடைபெற உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், பராமரிப்பின்றி புதர் மண்டி சிதிலமடைந்து காணப்பட்டது.இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, இந்த கோவிலை, அப்பகுதி கிராம மக்கள் இணைந்து, புதுப்பித்து கட்டி முடித்தனர். இதையடுத்து, இக்கோவிலின், மஹா கும்பாபிஷேக விழா, 8ம் தேதி காலை, 10:00 மணியளவில் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று (ஜூலை., 5ல்) காலை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜை, தன பூஜை, கிராம தேவதை வழிபாடுகள் நடந்தன. இதில் பலர் பங்கேற்றனர்.