புதுக்கோட்டை: ராங்கியம், மிதிலைப்பட்டி அருகே உள்ள சிவயோகபுரம், அருள்மிகு தர்மசாஸ்தா கோயிலில் வரும் 13ம்ஙதேதி சனிக்கிழமை காலை 10 மணி அளவில் பதினெட்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. அத்துடன் தர்மசாஸ்தா அய்யப்பன் மற்றும பரிவார தேவதைகளுக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் பகல் 12-00 மணிக்கு வள்ளியம்மை ஆச்சி இலவச திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெறுவதுடன் இரவு அலங்கார ரதத்தில் அய்யப்பன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.