பதிவு செய்த நாள்
07
ஜூலை
2019
02:07
திருநெல்வேலி:வயலில் புதைந்து கிடந்த, ஆறுமுக நயினார் சிலை, நேற்று கண்டெடுக்கப் பட்டது. திருநெல்வேலி அருகே, தாமிரபரணி கரையோரம் உள்ள கிராமம், சங்காணி. இங்கு, காளி என்பவரின் வயலில், கல் ஒன்று தென்பட்டது.
அதை சுத்தப்படுத்திய போது, மயில் மீது அமர்ந்த நிலையிலான, ஆறுமுக நயினார் சிலை என்பது, தெரிந்தது. 3 அடி உயரம் உள்ள, அந்த சிலையை, பொதுமக்கள் வழிபட துவங்கினர்.தகவல் அறிந்த, அருங்காட்சியக காப்பாட்சியர், சிவசத்தியவள்ளி, சங்காணி கிராமத்திற்கு சென்று, சிலையை மீட்டார். தற்போது, அந்த சிலை, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியக காப்பாட்சியர், சிவசத்தியவள்ளி கூறுகையில், ஆறுமுக நயினார் சிலையின் கை, கால்கள் உடைந்து உள்ளன. நீண்ட ஜடாமகுடம் உள்ளது. பிற்கால நாயக்கர் காலமான, 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது, என்றார்.