அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் நடை ஜூலை 16 பூரண சந்திரகிரகணத்தை முன்னிட்டு அன்றிரவு 7:00 மணிக்கு சாத்தப்படும். நிர்வாக அதிகாரி மாரிமுத்து கூறியதாவது: இக்கோயில் தவிர,அழகர்மலை ராக்காயி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில்களும் இரவு 7:00 மணிக்குள் அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்படும். ஜூலை 17ம் தேதி காலை வழக்கம்போல் நடை திறக்கப்படும்,என்றார்.