பதிவு செய்த நாள்
07
ஜூலை
2019
02:07
அந்தியூர்: அந்தியூர் தாலுகா, அத்தாணி, திருவள்ளுவர் நகர், ஓடைமேட்டில், ஆனந்தவல்லி உடனமர் சந்திரசேகர் சிவாலயம் உள்ளது. இங்கு பிரதோஷ உற்சவமூர்த்தி, கும்பாபிஷேக விழா, நாளை காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக, அன்று காலை, 7:15 மணிக்கு, கணபதி பூஜை, யாக பூஜை, மஹா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று மதியம், 3:00 மணிக்கு, புனித தீர்த்த ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்கின்றனர்.