அருப்புக்கோட்டை:ஒடிசா புரி நகரில் ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இங்குள்ள தேரோட்டத்தை போல் அருப்புக்கோட்டையில் ஜெகந்நாதர் ரத யாத்திரை நடந்தது.ரதத்தில் வீற்றிருந்த ஜெகந்நாதர், பலராமர் சுபத்ரா தேவி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.யாத்திரை அருப்புக்கோட்டை புளியம்பட்டி ராதாகிருஷ்ணர் ராமானுஜர் பஜனை கூடத்தில் இருந்து மாலை4 :00 மணிக்கு புறப்பட்டு, நாடார் சிவன் கோயில், பெரிய கடை வீதி, திருச்சுழி ரோடு வழியாக தேவாங்கர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முடிவடைந்தது.