பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
12:07
கடலுார்: கடலுாார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, சிவகாமசுந்தரி நடராஜர் தரிசனம் நடந்தது.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம் நடந்தது.
இதையொட்டி சிவகாமசுந்தரி, நடராஜர் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின் பாடலீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.சிவகாமசுந்தரி, நடராஜர் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் நடந்தது. தொடர்ந்து வீதியுலா நடந்தது. சுவாமி கோவில் வந்தடைந்ததும், திருக்கோவில் சிவகர தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தர்கார் பரணிதரன், சிவமணி குருக்கள் செய்திருந்தனர்.விருத்தாசலம்விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர் சாமிகள் ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. ஆனி திருமஞ்சனத்தையொட்டி, மூலவருக்கு நேற்று காலை 7:00 மணியளவில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர் உற்சவ மூர்த்திகள் 11:00 மணியளவில் பக்தர்களுக்கு கிழக்கு கோபுர வாயிலில் காட்சியளித்தார்.பின்னர், சன்னதி வீதி, அய்யனார் கோவில் வீதி, தெற்கு கோட்டை வீதி, மேற்கு கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி வழியாக வீதியுலா நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.