பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
12:07
சென்னை:மவுலிவாக்கம், மங்களாம்பிகை சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று (ஜூலை., 8ல்) விமரிசையாக நடந்தது.
மவுலிவாக்கம், மாங்காடு ரோட்டில் அமைந்து உள்ளது, மங்களாம்பிகை சமேத சந்திரமவுலீஸ் வரர் கோவில்.இந்த சாலையில், திருப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று (ஜூலை., 8ல்) விமரிசையாக நடந்தது.இதை முன்னிட்டு, 6ம் தேதி முதல், யாகசாலை வளர்க்கப்பட்டு, கணபதி பூஜை, நவக்கிரஹ, வாஸ்து ஹோமம், பூர்ணா ஹூதி நடத்தப்பட்டது.நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்) இரவு, மூன்றாம் கால பூஜையுடன், தம்பதி, கன்னியா, சுமங்கலி பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக நாளான நேற்று (ஜூலை., 8ல்) காலை, நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடப்புறப்பாடு ஆகியவை நடந்தன.இதைத் தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டு, அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.