பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
12:07
சிதம்பரம்: சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகம், நந்தனார் மட நிர்வாகம் மற்றும் சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில், நந்தனார் வீதி உலா நடந்தது.நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகா தரிசனத்தையொட்டி சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் நாளைப் ஜூலை., 10ல்) போவார் என்னும் நந்தனார் சுவாமி வீதி உலா காட்சி நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது.
இதனையொட்டி ஓமக்குளம் நந்தனார் மடம் சவுந்திரநாயகி அம்மன் சமேத சிவலோகநாத ருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாரானைகள் நடந்தது.இதனைதொடர்ந்து நந்தனார் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி நடராஜர் தேரோடும் நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கீழ சன்னதியில் பொது தீட்சிதர்கள் நந்தனாருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.நிகழ்ச்சியில் மடாதிபதி பழனிவேல் சுவாமி, நந்தனார் அமைப்பு நிர்வாகி கள் டாக்டர் சங்கரன், இளங்கோவன், இளைய அன்பழகன், ஜெயச்சந்திரன், வினோபா, கலிய மூர்த்தி, மணிவேல், தாமோதரன், பாலையா, பன்னீர்செல்வம், நீலகங்காதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.