அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே புலியூரானில் பெத்த பெருமாள்சாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தேவதா அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, நவகிரக பூஜை வாஸ்துசாந்தி, முளைப்பாரி எடுத்தல், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், வேதபாராயணம், எந்திரஸ்தாபணம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது.